தொழில் பிரிவு
எமது நகரசபை நகர பிரதேசத்தில் பயனுறுதிமிக்க கருத்திட்டங்களை ஆரம்பிப்பதன்மூலம் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலொன்றை உருவாக்குவதோடு எமது அதிகார பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வினைத்திறன்மிக்க மற்றும் பயனுறுதிமிக்க சேவையை வழங்குவது எமது நோக்கமாகும்.
பொதுபயன்பாட்டு பிரிவு
பிரசைகளின் தேவைகளுக்காக அரங்கங்கள், விழா மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை ஒதுக்கிக்கொள்தல் என்பவற்றுடன் சமூக நலன்புரி சேவைகளை உருவாக்குவதன் ஊடாக திருப்திகரமான மக்கள் சேவையை உருவாக்குவது எமது நோக்கமாகும்.
நூலக சேவை
பிரசைகளுக்குள்ள செய்திகளை அறிந்துகொள்ளும் தேவையை நிறைவேற்றுவது, வாசிக்கும் ஆர்வத்தை வளர்ப்பது, வாசகர்களின் இலக்கிய இரசணையை வளர்ப்பது என்பவற்றை நோக்கமாகக்கொண்டு நூலக சேவை நடத்தப்படுகின்றது.
வரிப்பண பிரிவு
நகர எல்லைக்குள் அமைந்துள்ள ஆதனங்களை மதிப்பீடு செய்து குறித்த ஆதனங்களுக்கு வரிப்பண இலக்கங்களை வழங்குவது, வரிப்பண கட்டணங்களை குறித்தொதுக்குதல் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பேணுதல் முதன்மை பணிகளாகும்.
நானாவித வருமான பிரிவு
கைத்தொழில் வரி மற்றும் வியாபார வரி என்பவற்றை அறவிடுதல், வியாபார அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், விளம்பர அறிவித்தல் பலகைகளுக்காக கட்டணம் அறவிடுதல், மாநகரசபை வசமுள்ள வர்த்தக கட்டிட தொகுதிகளுக்கு வாடகை அறவிடுதல் உட்பட மாநகர சபைக்கு கிடைக்கும் வருமானம் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல் என்பவை இந்த பிரிவின் கடமையாகும்.
சுகாதார பிரிவு
வரலாற்று முக்கியம் வாய்ந்த கோட்டே மாநகரசபையின் பங்களிப்பில் நகர மக்களினதும் வெளியிலிருந்து வருகின்ற மக்களினதும் சுகாதார பிரச்சினைகளைத் தீர்த்தல், நோய் பரவுவதைத் தடுப்பதற்கு சரியான எச்சரிக்கை மற்றும் சுகாதார நடவடிக்கைகள் மூலம் மக்கள் இலகுவாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்காக தாய்மார் சிக்கல்கள், சிறுவர் போசாக்கு, நோய் தடுப்பு, அவசர மருத்துவ நடவடிக்கைகள் தொற்றும் மற்றும் தொற்றா நோய் பரிசோதனை, நோய் பரவுவதைத் தடுத்தல், பின் பரிசோதனை, டெங்கு நோயாளிகளை 24 மணித்தியாலங்களுக்குள் அறிந்துகொள்ளுதல், பரிசோதனைகளை நடத்துதல் மற்றும் திடீர் பல் நோய்கள், ஏனைய பல் நோய்கள் என்பவற்றிற்கு சிகிச்சையளித்தல் உள்ளிட்ட அனைத்து மருத்து நடவடிக்கைகளையும் சிறந்த வினைத்திறனுடனும் புரிந்துணர்வுடனும் நிறைவேற்றுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது நான் பெற்ற பாக்கியம் எனக் கருதுகிறேன்.
தீயணைப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு அலகு
வரி செலுத்தும் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்கள் என்பவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை உள்ளூராட்சி நிறுவனம் இன்னுமொரு அடிப்படை பொறுப்பாகக் கருதுகிறது. அந்த நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் உயிர்ப்பாதுகாப்பு அலகு நகரத்திற்கும் புறநகர் பகுதிக்கும் தமது சேவையை இருப்பத்திநான்கு மணித்தியாலமும் வழங்குவதற்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறது.
திட்டமிடல் பிரிவு
மாநகரசபை எல்லைக்குள் நிர்மாணிக்கப்படுகின்ற கட்டிடங்களின் திட்டங்களை அனுமதித்தல், காணிகளை துண்டுகளாக்குதல், காணிதுண்டுகளை ஒன்றுசேர்த்தல், கட்டிடங்களுக்குத் தேவைப்படுகின்ற சான்றிதழ்களையும் பத்திரங்களையும் வழங்குதல், அத்துமீறிய நிர்மாணம் தொடர்பாக கண்டறிவதன்மூலம் பிரசைகளுக்கு சேவையாற்றுதல் எமது பிரிவின் பணிகளாகும்.
மிருக வைத்திய பிரிவு
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டே மாநகரசபையின் உதவியுடன் நகர மக்களின் நன்மைக்காக கட்டாகாலியாகத் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்வதன் ஊடாக மரணத்தை ஏற்படுத்தும் நீர்ப்பய நோய் அற்ற சூழலை உருவாக்குதல், வீட்டு பிராணிகள் மூலம் மக்களுக்கு பரவக்கூடிய நோய்கள் பற்றி அறிவுறுத்தல்களை வழங்குதல், மாடறுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் செயலாற்றுதல், இறைச்சி வியாபாரம் செய்கின்ற இடங்களை தொடர்ச்சியாக பரிசீலித்தல் என்பவற்றின் மூலம் ஆரோக்கியமான மற்றும் சுகாதார பாதுகாப்புள்ள தலை நகரத்தை உருவாக்குவதற்கு பங்களிப்புச்செய்வது எமது அடிப்படை நோக்கமாகும்.
சட்ட பிரிவு
சட்ட திணைக்களம் தினசரி மேற்கொள்ளுகின்ற கடமைகள்
- மாநகரசபைக்கு எதிராக தொடரப்படுகின்ற வழக்கு நடவடிக்கைகளுக்காக மாநகரசபையின் சார்பில் தோற்றுதல்.
- மாநகரசபை கட்டளைச் சட்டம், ஏற்றுக்கொள்ளப்பட்ட இடைக்கால யாப்பு மற்றும் ஏனைய இடைநேர்விளைவான சட்டங்களின் கீழ் வெளி தரப்பினருக்கு எதிராக வழக்கு தொடர்தல், மாநகரசபையின் சார்பில் அதற்குத் தோற்றுதல் மற்றும் நடத்துதல்.
- கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட நிறுவனங்களுக்கு மாநகரசபையின் சார்பில் தோற்றுதல் மற்றும் அறிக்கைகளை சமர்ப்பித்தல்.
- மனித உரிமைகள் ஆணைக்குழு
- குற்றப் புலனாய்வு திணைக்களம்
- இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
- நடுத்தீர்ப்பு
- பொது மனுக்குழு
- பாராளுமன்ற மனுக்குழு
- ஏனைய அரச நிறுவனங்கள்
- மாநகரசபையின் திணைக்களங்களுக்கும் பிரிவுகளுக்கும் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குதல்
- மாநகரசபை வசமுள்ள சொத்துக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்கின்ற சட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பேணுதல்.
- மாநகரசபை செய்துகொள்ளுகின்ற உடன்படிக்கைகளை வரைவுபடுத்துதல் மற்றும் அது தொடர்பாக ஏற்படும் சிக்கல்களுக்கு தோற்றுதல்.
- அத்துமீறிய நிர்மாணங்களுக்காக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் அதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின்மூலம் மாநகரசபைக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துதல்.
சட்ட திணைக்களம் நிறைவேற்றுகின்ற சேவைகள்
- சட்ட திணைக்களம் கோட்டே மாநகரசபை அதிகார பிரதேசத்தில் வரி செலுத்துகின்ற மக்களுக்காக வார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 4.15 வரை திறந்துவைக்கபட்டுள்ளது.
- மாநகரசபையின் திணைக்களங்கள் மற்றும் பிரிவுகளிலிருந்து சட்ட ஆலோசணைகளின்பொருட்டு அனுப்பப்பட்டுள்ள கோப்புகள் தொடர்பாக விசாரிப்பதற்காக வருகின்ற சேவைபெறுநர்களுக்கு வார நாட்களில் பி.ப. 2.00 மணியின் பின்னர் சட்ட அதிகாரிகளைச் சந்தித்து சட்ட ஆரோசனைகளையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உண்டு.
- மாநகரசபையின் சொத்துக்களில் நீண்டகாலம் குடியிருக்கின்றவர்களுக்கு உறுதிகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுத்தல்.
- தகவலறியும் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குதல்.